தலைவர் – நிர்வாக இயக்குனர் பதவி பிரிப்பு: ‘செபி’ திட்டம்

தினமலர்  தினமலர்
தலைவர் – நிர்வாக இயக்குனர் பதவி பிரிப்பு: ‘செபி’ திட்டம்

புதுடில்லி : பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லிட்­டுள்ள, பொதுத் துறை மற்­றும் தனி­யார் துறை நிறு­வ­னங்­கள் பல­வற்­றில், தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர் பத­வி­களை, ஒரு­வரே வகிக்­கி­றார்.

இந்த பத­வி­களை பிரித்து, தலை­வர் மேற்­பார்­வை­யில், நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் இயக்­கு­னர்­கள் செயல்­பட்­டால், நிர்­வாக செயல்­பா­டு­கள் சிறப்­பாக இருக்­கும் என்­பது, மேலை­நா­டு­களில் நிரூ­ப­ண­மாகி உள்­ளது.அத­னால், இப்­ப­த­வி­களை பிரிப்­பது குறித்து ஆராய, ‘செபி’ ஆலோ­சனை குழுவை அமைத்­துள்­ளது. இக்­கு­ழு­வின் அறிக்கை, அடுத்த மாதம் கிடைத்­த­தும், ‘செபி’ இறுதி முடிவு எடுக்­கும்.

தற்­போது, நிறு­வ­னங்­கள் விருப்­பத்­தின்­படி, பத­வி­களை பிரித்­துக் கொள்­ள­லாம் என்ற விதி­முறை உள்­ளது. இதை, கட்­டா­ய­மாக்­கும் வகை­யில், விதி­மு­றை­களில் திருத்­தம் செய்­யப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ரிசர்வ் வங்கி உத்­த­ர­வுப்­படி, வங்­கி­களில், தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர் பத­வி­கள், ஏற்­க­னவே பிரிக்­கப்­பட்டு உள்ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை