காதிம் இந்தியா நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது

தினமலர்  தினமலர்
காதிம் இந்தியா நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது

புதுடில்லி : காதிம் இந்­தியா நிறு­வ­னம், காலணி விற்­ப­னை­யில் ஈடு­பட்டு வரு­கிறது.

இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டுக்கு அனு­மதி கோரி, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘செபி’யிடம் விண்­ணப்­பித்து இருந்­தது. இது தொடர்­பான ஆவ­ணங்­களை பரி­சீ­லித்த, ‘செபி’, காதிம் இந்­தியா நிறு­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி வழங்கி உள்­ளது. இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 550 – 650 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. இந்த நிதி, நிறு­வ­னத்­தின் பழைய கடன்­களை செலுத்­த­வும்; நிறு­வன நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­க­வும் பயன்­ப­டுத்­தப்­படும்.

இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீட்­டுக்­கான பணி­களை, ஆக்­சிஸ் கேப்­பிட்­டல், ஐ.டி.எப்.சி., பேங்க் ஆகி­யவை, மேற்­கொள்ள உள்ளன. இதை­ய­டுத்து, விரை­வில் பங்கு வெளி­யீட்டு தேதி அறி­விக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. பங்கு வெளி­யீடு முடிந்த பின், இந்­நி­று­வ­னத்­தின் பங்­கு­கள், மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில் பட்­டி­ய­லி­டப்­படும். இதைத் தொடர்ந்து, பங்­கு­கள் மீது வர்த்­த­கம் துவங்­கும்.

மூலக்கதை