பாதாள சாக்கடை திட்டத்திற்கு கணக்கெடுக்கும் பணி துவக்கம்!நகராட்சி விரிவாக்க பகுதிகளில் வசதிகள் மேம்படும்

தினமலர்  தினமலர்

நத்தப்பேட்டை:நகராட்சி விரிவாக்க பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் வருவதற்கு, மாநில குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், சாலைகளை அளவு எடுக்கும் பணி துவக்கியுள்ளனர். இதன் மூலம், விரிவாக்க பகுதிகளில், கழிவுநீர் தேக்கம் இருக்காது என, நம்பப்படுகிறது.தேனம்பாக்கம், நத்தப்பேட்டை, ஓரிக்கை ஆகிய ஊராட்சிகள் மற்றும் செவிலிமேடு பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி நிர்வாகங்கள், 2011ம் ஆண்டிற்கு பின், காஞ்சிபுரம் நகராட்சியில் இணைக்கப்பட்டன.
இந்த இணைப்பிற்கு பின், காஞ்சிபுரம் நகராட்சியில் இருந்த, 45 வார்டுகளின் எண்ணிக்கை, 52 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.ஓரிக்கை, நத்தப்பேட்டை, செவிலிமேடு ஆகிய பகுதிகளுக்கு, பாதாள சாக்கடை திட்டத்தை நகராட்சி விரிவுப்படுத்தவில்லை. மேலும், வரி வசூலிப்பில் ஈடுபடவில்லை எனவும் கூறப்படுகிறது.இதனால், குடியிருப்பு மற்றும் சாலையோரங்களில், மழைநீர் வெளியேற வழியின்றி, கழிவுநீராக மாறியுள்ளது. நகரில், கொசுக்களின் உற்பத்தி மற்றும் காய்ச்சலின் அறிகுறி அதிகமாக இருக்கிறது.
இதை தவிர்க்க, விரிவாக்க குடியிருப்பு பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் துவக்க வேண்டும் என, விரிவாக்க பகுதி வாசிகள் நீண்ட நாட்கள் கோரிக்கை நிறைவேற்ற உள்ளது.மேலும், நகராட்சி விரிவாக்கத்திற்கு உரிய, சாலைகள் மற்றும் குடிநீர் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை, நகராட்சி நிர்வாகம் படிப்படியாக மேம்படுத்தி வருகிறது.அடுத்த கட்டமாக, பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்திற்கு, நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு புதை வடிகால் மற்றும் குடிநீர் வடி வாரியத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.அதை ஏற்று, புதை வடிகால் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், விரிவாக்க எல்லையின் சாலைகளை அளவு எடுக்கும் பணி துவக்கியுள்ளனர். இந்த பணிகள் ஒரு மாதம் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பிறகே, நகராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை திட்டத்திற்கு அரசிடம் நிதி கேட்டு, கருத்துரு அனுப்பும் என, நம்பப்படுகிறது.
கணக்கெடுப்பிற்கு பின் தான் தெரியும்!காஞ்சிபுரம் விரிவாக்க பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக, சாலைகள் அளவு எடுக்கும் பணி துவக்கி உள்ளோம். ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இது முடிந்த பின் தான், மொத்தம் புதை வடிகால்வாயின் நீளம் தெரிய வரும். அடுத்த படியாக, நகராட்சி திட்ட மதிப்பீடு தயாரித்து, ஒப்புதலுக்கு அனுப்ப இருக்கிறது.
-புதைவடிகால் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரி, காஞ்சிபுரம்பயன் பெறும் பகுதிகள்! திருக்காலிமேடு நத்தப்பேட்டை செவிலிமேடு ஓரிக்கை தேனம்பாக்கம் நசரத்பேட்டை தாட்டித்தோப்பு அஞ்சூர் கே.எஸ்.பி., நகர் திருவள்ளுவர் நகர் சதாவரம் முருகன் நகர் பெரியார் நகர்

மூலக்கதை