மக்கள் விரோத பாஜ ஆட்சியில் நீடிப்பதா? பட்நவிஸ் அரசுக்கு ஆதரவு விரைவில் வாபஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மக்கள் விரோத பாஜ ஆட்சியில் நீடிப்பதா? பட்நவிஸ் அரசுக்கு ஆதரவு விரைவில் வாபஸ்

மும்பை : மகாராஷ்டிராவில் மக்கள் விரோத பாஜ ஆட்சியில் இருந்து விலகிக் கொள்வது விரைவில் அறிவிக்கப்படும் என சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது. மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் ஆளும் பாஜவுடன் சிவசேனா ஆட்சியில் ஒட்டிக் கொண்டுள்ளது.

இருந்த போதிலும் பாஜவின் செயல்பாடுகளை சிவசேனா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் முட்டல்களும் மோதல்களும் நீடித்து வருகின்றன.

இந்த சூழலில் மகாராஷ்டிராவில் முதல்வர் பட்நவிஸ் தலைமையிலான பாஜ ஆட்சி மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதால் அதற்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும் எம்பியுமான சஞ்சய் ரவுத் கூறுகையில், பாஜ ஆட்சியில் சிவசேனா நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

வரலாறு காணாத விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காணாமல் இருப்பது ஆகியவற்றின் மூலம் பாஜ மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. இதற்கெல்லாம் சிவசேனா எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது.

இதற்கு முழுக்க முழுக்க பாஜதான் காரணம்.

பாஜ தலைமையிலான அரசு மீது மகாராஷ்டிரா மக்களுக்கு மிகப் பெரிய அளவில் கோபம் உள்ளது.

எனவே மக்களுக்கு பிடிக்காத அந்த ஆட்சியில் தொடர்ந்து பங்கு பெற சிவசேனா விரும்பவில்லை. எனவே முதல்வர் பட்நவிஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்கும்.

இதுகுறித்து அனைத்து தலைவர்களும் உத்தவ் தாக்கரேவிடம் கருத்து தெரிவித்து வருகின்றனர். இறுதி முடிவை அவர் அறிவிப்பார் என்றார்.

மத்தியிலும் மாநிலத்திலும் தாங்கள் கேட்ட அமைச்சரவை பதவியை ஒதுக்கி தரவில்லை என பாஜ மீது சிவசேனாவுக்கு அதிருப்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை