வெளிநாட்டில் தொழில் தேடித் தருவதாக கூறி பிக்கு செய்த காரியம்!

PARIS TAMIL  PARIS TAMIL
வெளிநாட்டில் தொழில் தேடித் தருவதாக கூறி பிக்கு செய்த காரியம்!

ஜப்பானில் தொழில் தேடி தருவதாகக் கூறி மக்களிடம் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட பிக்கு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
ஐப்பானில் இருந்து தனக்கு 200 புலமைப் பரிசில்கள் கிடைத்துள்ளதாக கூறி இந்த மோசடியை செய்துள்ளார்.
 
தன்னால் 200 நபர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தர முடியும் என்று போலியான ஆவணங்களை காண்பித்து குறித்த பிக்கு பலரிடம் ஏமாற்றிப் பணம் மோசடி செய்துள்ளார்.
 
தொழில் பெற்றுக் கொள்வதற்கு 5 இலட்சம் ரூபா செலவாகும் என்றும் முற்பணமாக 2 இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், மிகுதி பணத்தை தவணை முறையில் ஜப்பானில் தொழில் செய்து கொண்டே செலுத்தலாம் என்றும் குறித்த பிக்கு கூறியுள்ளார்.
 
இதனையடுத்து, 43 நபர்களிடம் 2 இலட்சம் ரூபாய் வீதமும் 62 நபர்களிடம் 1 இலட்சம் ரூபாய் வீதமும் பணம் வசூல் செய்துள்ளார்.
 
இவ்வாறு மோசடி செய்த மொத்தப் பணம் ஒரு கோடியே 48 இலட்சம் என்றும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
 
அத்துடன் சுய விலாசம் இடப்பட்ட மற்றும் தனது கையொப்பத்துடன், நம்பிக்கை ஒப்பந்தம் செய்துள்ளார்.
 
இந்த ஒப்பந்தத்தை மீறுவோறுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற நேரிடும் என குறித்த ஒப்பந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து, தொழில் பெற்றுத் தருவதாகக் கூறிய பிக்குவின் மோசடியை அறிந்த பலர் தமது பணத்தைப் பெற்றுத் தருமாறு ஹங்வெல்ல பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, குறித்த பிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் இந்தப் பிக்கு முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹங்வெல்ல பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை