தெற்காசியாவில் முதன்முறையாக இலங்கையில் ஏற்பட்ட அபூர்வம்!

PARIS TAMIL  PARIS TAMIL
தெற்காசியாவில் முதன்முறையாக இலங்கையில் ஏற்பட்ட அபூர்வம்!

தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரங்களிலும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் 22ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக வனவிலங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.
 
வாரத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பொதுமக்களின் நன்மை மிருகக்காட்சி சாலை திறந்து வைக்கப்படவுள்ளது.
 
எதிர்வரும் 22ஆம் திகதியில் இருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7.30 முதல் இரவு 10 மணிவரை இவ்வாறு பொது மக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
 
இரவு நேரங்களில் மிருகங்கள் வாழும் எல்லையில் இவ்வாறு திறந்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதன்மூலம் இரவு நேரத்தில் மிருகங்கள் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதனை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
 
இவ்வாறான அரிய வாய்ப்பு தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கை மிருகக்காட்சி சாலையில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறான நடவடிக்கையின் மூலம் அதிகளவான சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மூலக்கதை