ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிப்பு

டாக்கா : வங்காளதேசத்தில் தஞ்சமடைந்து வரும் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளதால், அவர்களுக்கு 14000 முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மாரின் வடக்குப் பகுதியிலுள்ள ரக்கினே மாநிலத்தில் ரோஹிங்யா சமூகத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களில் பெரும்பான்மையானோர்  வங்காளதேசத்திலிருந்து கிளம்பி மியான்மாரில் குடி பெயந்தனர். கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி சுமார் 10 லட்சத்துக்கும் மேலான மக்கள் மியான்மரில் கடந்த 2012-ம் ஆண்டில் அங்கிருக்கும் ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட பல்வேறு மோதல்களுக்கு பிறகு மியான்மார் அரசுக்கு எதிராக  ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் மியான்மார் ராணுவத்தினருக்கும்,  ரோஹிங்யா மக்களுக்கும் மிடையே நடந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். இதனால்  ரோஹிங்யா மக்கள் மீண்டும் வங்காளதேசத்திற்கு அகதிகளாக தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.



இந்த நிலையில் மியான்மாரிலுள்ள  போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்யா போராளிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். இதைத்  தொடர்ந்து மியான்மர் ராணுவம் ரோஹிங்யா மக்களை வேட்டையாட ஆரம்பித்ததும் அங்கிருந்து சுமார் 3. 70 லட்சம் மக்கள் மியான்மாரை விட்டு  வெளியேறி மீண்டும் வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இப்படி அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் அகதியாக வரும் மக்களுக்காக 14,000 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வங்க தேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து அவர்கள் கூறும் போது ரோஹிங்யா அகதிகள் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பும்வரை அரசு ஏற்படுத்திய முகாம்களில் தான் தங்க வேண்டும் என்றார்கள்.


.

மூலக்கதை