பீச், பார்க் உள்பட பொது இடங்களில் மதுக்குடிக்க தடை : கோவா முதல்வர் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீச், பார்க் உள்பட பொது இடங்களில் மதுக்குடிக்க தடை : கோவா முதல்வர் அதிரடி

பனாஜி : கோவாவில் பொது இடங்களில் பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானம் குடிக்க தடை விதிக்க உள்ளதாக முதல்வர்  மனோகர் பாரிகர் அறிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிகர் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

தேசிய அளவில் சுற்றுத்தலாவிற்கு பெயர் போன மாநிலமாக கோவா இருந்து வருகிறது. பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் தாராளமாக கிடைப்பதோடு பீச், பார்க் என பொது இடங்களில் மது அருந்தலாம் என்பதால் இதற்காகவே பெரும்பாலானோர் கோவாவிற்கு சுற்றுலா செல்கின்றனர்.

மேலும்  அம்மாநிலத்தின் மொத்த வருவாயில் 30 சதவிகிதத்துக்கும் மேலான வருவாய் மதுபான விற்பனையிலும், சுற்றுலாத்துறையிலுமிருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவாவில் நடந்த நிகழ்ச்சி  ஒன்றில் பேசிய முதல்வர் பாரிகர் இன்னும் 15 நாட்களில் பொது இடங்களில் மது விற்பதை தடை செய்ய இருக்கிறேன்.



கடைக்குள் வாங்குபவர்கள் பீச், பார்க், தெரு  என கோவாவின் பொது வெளிகளில் குடிக்க கூடாது, தவிர அங்கீகரிக்கப்பட்ட மது விற்பனையாளர்கள் பொது இடங்களில், மக்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் அவர்களின் உரிமையும் ரத்து செய்யப்படும். இப்போது இது  குறித்து உயர் மட்ட அதிகாரிகளிடம் பேசி வருகிறேன்’ எனக் கூறினார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு கோவாவில் மது குடிக்க கூடாத இடங்கள் என அரசால் சில இடங்கள் அறிவிக்கப் பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குடித்து விட்டு பொது இடங்களில் பாட்டிலை உடைத்து விட்டும், வீசி எறிந்து செல்லும் நபர்களையும் பிடித்து போலீசார் கைது செய்து வந்தது  குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மதுப் பிரியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

.

மூலக்கதை