இலங்கை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையை சுற்றியும் வங்காள விரிகுடாவின் பெரும்பாலான கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் கடற்பிரதேசத்தில் வலுவடைந்துவரும் தாழமுக்க காலநிலை காரணமாக, இந்த நிலை ஏற்பட கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த பிரதேசங்களில் அடிக்கடி கடல் கொந்தளிப்பு காணப்படும் எனவும் கடற்பிரதேசத்தில் அடிக்கடி கடும்மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடைமழை பெய்யும் என கூறப்படுகின்றது.
 
அத்துடன் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை