இந்தியாவில் அகதிகளாக ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடு கடத்த தேசிய மனித உரிமை ஆணையம் எதிர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவில் அகதிகளாக ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடு கடத்த தேசிய மனித உரிமை ஆணையம் எதிர்ப்பு

புதுடெல்லி: இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள மியான்மர் நாட்டை சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடு கடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோா்ட்டில் விசாரணைக்கு வரும்போது தனது தரப்பு வாதத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளது. மியான்மர் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

உயிருக்குபயந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான வங்க தேசத்துக்கும் அங்கிருந்து இந்தியாவுக்கும் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த வகையில் இந்தியாவில் ராஜஸ்தான், உ. பி.

உள்ளிட்ட 5 மாநிலங்களில் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.

இதை எதிர்த்து 2 ேராஹிங்கியா முஸ்லிம்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சர்வதேச சட்டப்படி அகதிகளாக வந்தவர்களை திரும்ப அனுப்ப முடியாது என தங்களது மனுவில் கூறியுள்ளனர்.

இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ரோஹிங்கியா முஸ்லிம்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இந்தியாவின் இயற்கை வளங்கள் மீது புதிய சுமைகளை அனுமதிக்க முடியாது எனவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவிக்கப்போவதாக தகவல் வெளியானது. இதற்கு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இதர நாட்டை சேர்ந்த அகதிகள் இந்தியாவில் இருக்கும்போது ரோஹிங்கியா முஸ்லிம்கள் மட்டும் இங்கு ஏன் இருக்கக்கூடாது என கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு சார்பில் வரும் திங்கள் கிழமை சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

அப்போது மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என தேசிய மனித உரிமை அமைப்பின் தலைவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியுமான எச். எல். தத் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் மீறப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.




.

மூலக்கதை