இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பின்ச் சந்தேகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பின்ச் சந்தேகம்

சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக  எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 6 வாரங்களுக்கு முன், இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில், சர்ரே அணிக்காக விளையாடுகையில், ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பின்ச்சின், வலது காலின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த 12ம் தேதி நடைபெற்ற, இந்திய வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், ஆரோன் பின்ச் விளையாடவில்லை.



எனினும் காயத்தின் தன்மை மேலும் மோசமாகியுள்ளதால், இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆரோன் பின்ச் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.   ஆரோன் பின்ச் விளையாடாவிட்டால், டிராவிஸ் ஹெட் அல்லது ஹில்டன் கார்ட்ரைட் ஆகியோரில் ஒருவர், டேவிட் வார்னருடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. இதில், ஹில்டன் கார்ட்ரைட் அறிமுக வீரராவார்.

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அவர் இதுவரை விளையாடியதில்லை. பயிற்சி போட்டியிலும் அவர் டக் அவுட்டானார்.

25 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவரான டிராவிஸ் ஹெட், பயிற்சி போட்டியில் 65 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை