மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 
ஐ.பி.எல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
 
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக திவாரி மற்றும் சிம்மன்ஸ் களமிறங்கினர். 5 பந்துகள் சந்தித்த நிலையில் ரன்கள் ஏதும் எடுக்காமல் சிம்மன்ஸ் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா ஓரளவு சமாளித்து ஆடினார். 
 
8-வது ஓவரில் ரோகித் ஷர்மா 27 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய அம்பாதி ராயுடு அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். தொடக்க நாயகன் திவாரி 52 ரன்களில் ரன் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் பொல்லார்டு 13 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
 
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ராயுடு 37 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். கொல்கத்தா தரப்பில் போல்ட் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 
இதைத் தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் நரைன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், இவருடன் களமிறங்கிய லின் 14 பந்துகளில் 26 ரன்களை குவித்தார். பின் களமிறங்கிய காம்பீர் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
 
ராபின் உத்தப்பா 2 ரன்களுக்கும், பாண்டே 33 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய யூசப் பதான் 20 ரன்களும், கிராண்ட்ஹோமி 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த நிலையில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை மட்டும் எடுத்தது. 
 
கொல்கத்தா அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 1 ரன்னுடனும், குர்னல் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மூலக்கதை