ஹிலாரிக்கு 50 லட்சம் கள்ள ஓட்டு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹிலாரிக்கு 50 லட்சம் கள்ள ஓட்டு?

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டனுக்கு 50 லட்சம் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதாக பரவிய தகவலையடுத்து அதுகுறித்து விசாரிக்க தனிக் குழுவை அமைத்துள்ளார் அதிபர் ட்ரம்ப். கலிபோர்னியா, வெர்ஷினியா, ஹெம்சினியா ஆகிய மூன்று மாகாணங்களில் ஹிலாரிக்கு அதிக அளவில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதாக ட்ரம்ப் புகார் தெரிவித்து இருந்தார்.

இந்த மூன்று மாகாணங்களிலும் ட்ரம்ப் தோல்வியடைந்தார். இதை விசாரிக்க இப்போது துணை அதிபர் மிகி பென்ஸ் மற்றும் மூத்த அதிகாரி கிரீஸ் கோபாச் தலைமையில் விசாரணை கமிஷன் போடப்பட்டுள்ளது.



மெக்சிகோ, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மூன்று மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கையில் பயங்கர குளறுபடிகள் நடந்தது. ஓட்டு எண்ணிக்கையை ட்ரம்ப் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்று ஹிலாரி புகார் கூறியுள்ளார்.

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் வைத்தே விசாரணை கமிஷனை அமைத்துள்ளார் ட்ரம்ப். அதிகாரி கோபாச் மீது வகுப்பு, இன வாத குற்றச்சாட்டுகளும் இருக்கிறது.

இதனால் விசாரணை கமிஷனில் தனக்கு ஆதரவான ஆட்களை நியமித்துள்ளதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

.

மூலக்கதை