7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

PARIS TAMIL  PARIS TAMIL
7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

 மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 230 ரன்களை குவித்த பஞ்சாப் அணி பரபரப்பான போட்டில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.
 
பஞ்சாப் சார்பில் மார்ட்டின் கப்தில், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கப்தில் 18 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அசுர வேகத்தில் ரன் குவித்தார்.
 
ஒருபுறம் முக்கியமான இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சகா தொடர்ந்து அதிரடி காட்டினார். அவருக்குத் துணையாக ஷேன் மார்ஷ் 16 பந்தில் 25 ரன்களும், அக்சார் பட்டேல் அவுட்டாகாமல் 13 பந்தில் 19 ரன்களும் சேர்த்தனர்.  சகா 55 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 93 ரன்கள் குவித்து ஆட்மிழக்காமல் குவிக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பில் மெக்கிளெனகன் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
 
பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ன இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. கடின இலக்கை துரத்திய மும்பை அணியின் துவக்க வீரர்களான சிம்மன்ஸ் மற்றும் பி.ஏ. படேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிம்மன்ஸ் 32 பந்துகளில் 59 ரன்களில் ஆட்டமிழக்க பி.ஏ. படேல் 23 பந்துகளில் 38 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 
 
பின் களமிறங்கிய ரானா 12 ரன்களுடனும், ரோகித் ஷர்மா 5 ரன் எடுத்து ஆட்டமிழக்க, பொல்லார்டு, ஹர்பஜன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் பொல்லார்டு ஆட்டத்தை தொடர்ந்தார். 
 
கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஒரு சிக்சர் மட்டும் விளாசிய பொல்லார்டு, அடுத்தடுத்த பந்துகளில் ரன்களை குவிக்க தடுமாறினார். இதைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மூலக்கதை