ஒவ்வொரு ஓவருக்கும் 12-14 ரன்களை வழங்கியதே தோல்விக்கு காரணம் : குஜராத் கேப்டன் ரெய்னா விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒவ்வொரு ஓவருக்கும் 1214 ரன்களை வழங்கியதே தோல்விக்கு காரணம் : குஜராத் கேப்டன் ரெய்னா விளக்கம்

கான்பூர்: ஐபிஎல் தொடரில், கான்பூரில் நேற்று இரவு நடந்த 50வது லீக் போட்டியில், குஜராத் லயன்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

பின்ச் 69 ரன்கள் (39 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். ஷமி, கம்மின்ஸ், அமித் மிஸ்ரா, பிராத்வெயிட் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் பேட் செய்த டெல்லி 19. 4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்து, 2 விக்கெட் வித்யாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

ஸ்ரேயாஸ் அய்யர் 96 ரன்கள் (57 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

பால்க்னர் 2, பாசில் தம்பி, குல்கர்னி, சங்வான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 12வது போட்டியில் விளையாடிய டெல்லி 5வது வெற்றியை பதிவு செய்தது.

13வது போட்டியில் விளையாடிய குஜராத் 9வது தோல்வியை சந்தித்தது. ஆனால் இரு அணிகளும் ஏற்கனவே ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்து விட்டன.
 
 வெற்றி குறித்து டெல்லி கேப்டன் ஜாகிர்கான் கூறுகையில், ‘முடிவின் சரியான பக்கத்தில் விழுந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பொதுவாக ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்து விட்டால், ‘எனர்ஜி லெவல்’ குறைவாக இருக்கும். எனினும் நாங்கள் தொழில்முறை அணி.

எஞ்சிய 2 போட்டிகளையும் வென்று நல்ல நிலையில் சீசனை நிறைவு செய்ய விரும்புகிறோம்’ என்றார்.

தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ‘அனைத்தையும் முயற்சி செய்து பார்த்து விட்டோம்.

ஸ்ரேயாஸ் அய்யர் மிக சிறப்பாக பேட்டிங் செய்தார். ஒவ்வொரு ஓவருக்கும் டெல்லி 12-14 ரன்கள் எடுத்தது.

அதுதான் நாங்கள் செய்த தவறு. பல போட்டிகளில் வெற்றிக்கு நெருக்கமாக வந்து தோல்வியடைந்துள்ளோம்’ என்றார்.

* குஜராத்துக்கு எதிராக குவித்த 96 ரன்களே டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் அய்யரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

முன்னதாக 2015-16 சையது முஸ்தாக் அலி டிராபியில், விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் (மும்பை அணிக்காக) எடுத்த 86 ரன்கள் அவரது அதிகபட்சமாக இருந்தது.  
* இதுவரை 2 ஐபிஎல் சீசன்களில், முதலில் பேட் செய்த 12 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே குஜராத் வென்றுள்ளது.

அந்த ஒரு வெற்றியும் கடந்த சீசனில் வெறும் ஒரு ரன் வித்யாசத்தில் டெல்லி அணிக்கு எதிராக கிடைத்தது.

இதன் மூலம் இரண்டாவதாக பந்து வீசும்போது எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல் குஜராத் தடுமாறுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

.

மூலக்கதை