ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்குகளை புனே உரிமையாளர் வாங்கினாரா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்குகளை புனே உரிமையாளர் வாங்கினாரா?

கொல்கத்தா: ஸ்பாட் பிக்சிங் வழக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) ஆகிய 2 அணிகளுக்கு, 2 வருடம் தடை விதித்து, கடந்த 2015ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த 2 அணிகளுக்கு பதிலாக ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட், குஜராத் லயன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.

2016, 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் மட்டும் பங்கேற்கும் வகையில் இந்த 2 அணிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் நடப்பு சீசனுடன் முடிவுக்கு வருகிறது.



இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லா, ‘2 அணிகளுடனும் ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்படாது. அடுத்த சீசனில் விளையாட வேண்டுமென்றால், புனே, குஜராத் அணிகள் மீண்டும் புதிதாக ஏலத்தில் பங்கேற்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதனிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குகளை புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வாங்கியதாக ெசய்திகள் வெளியானது.

கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்கா இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், ‘என்ன விதமான செய்தி இது. சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் உள்ள இந்த கேள்விக்கு எனது பதில் ‘இல்லை’ என்பதுதான்.

விளையாட்டு துறையில் ‘கார்ப்ரேட்டுகள்’ ஈடுபடுவதற்கான நேரம் வந்து விட்டது’ என்றார்.

.

மூலக்கதை