அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் இணைய தளத்திற்குள் ஊடுருவிய ‘ஹேக்கர்களால்’ பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் இணைய தளத்திற்குள் ஊடுருவிய ‘ஹேக்கர்களால்’ பரபரப்பு

புதுடெல்லி: அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் (ஏஐஎப்எப்) இணையதளம் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு? என்பது தெரியவில்லை.

இணையதளத்திற்குள் ஊடுருவிய ‘ஹேக்கர்கள்’, இந்தியாவுக்கு எதிராகவும், குல்பூஷன் ஜாதவை விடுவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு எதிராகவும் ‘மெசேஜ்களை’ பதிவிட்டுள்ளனர். குல்பூஷன் ஜாதவ் ஒரு இந்தியர்.



இவர் இந்தியாவின் உளவு நிறுவனமான ‘ரிசர்ச் அண்டு அனாலிசஸ் விங்’ எனப்படும் ‘ரா’ அமைப்புக்கு பாகிஸ்தானில் வேவு பார்த்ததாக கூறி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் சமீபத்தில் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஏஐஎப்எப்-பின் இணையதளம் ‘ஹேக்’ செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


.

மூலக்கதை