2 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தது எப்படி? முகமது ஷமி விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
2 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தது எப்படி? முகமது ஷமி விளக்கம்

டெல்லி: ஐசிசி தரவரிசையில் டாப்-8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி, 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஒரு நாள் அணியில் இடம் பிடித்துள்ளார். கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் விளையாடிய முகமது ஷமி, அதன்பின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை.



மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது குறித்து முகமது ஷமி கூறுகையில், ‘ஒரு நாள் போட்டிக்கான அணியில் இருந்து 2 ஆண்டுகள் வெளியே இருப்பது என்பது பெரிய இடைவெளி. இந்த 2  ஆண்டுகளில் எனது ‘பிட்னசில்’ கவனம் செலுத்தினேன்.

அத்துடன் எனது பலவீனங்களை கண்டறிந்து சரி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டேன். சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

ஐபிஎல் தொடர் எனக்கு நல்ல ‘பிளாட்பார்ம்’ ஆக உள்ளது (டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக முகமது ஷமி விளையாடி வருகிறார்). டெல்லி கேப்டன் ஜாகிர்கானிடம் பேசும்போது நிறைய ‘டிப்ஸ்’ கிடைக்கும்’ என்றார்.


.

மூலக்கதை