டெல்லி அணியை 66 ரன்களில் சுருட்டிய மும்பை இந்தியன்ஸ்!

PARIS TAMIL  PARIS TAMIL
டெல்லி அணியை 66 ரன்களில் சுருட்டிய மும்பை இந்தியன்ஸ்!

 மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான பந்து வீச்சு மூலம் டெல்லி அணியை 66 ரன்களில் சுருட்டி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
ஐ,பி.எல். தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ், பார்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 
 
பார்தீவ் பட்டேல் நிதானமாக விளையாட சிம்மன்ஸ் அதிரடி காட்டினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவரில் 79 ரன்கள் குவித்தது. பார்தீவ் பட்டேல் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து அதிரடி வீரர் பொல்லார்டு களம் இறங்கினார். சிம்மன்ஸ் 43 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 
 
பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடி ஆட்டம் காட்ட மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பொல்லார்டு 35 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்தும், ஹர்திக் பாண்டியா 14 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்தும் கடைசி வரை அவுட்டாகமல் இருந்தனர். டெல்லி அணியில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 ஓவரில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
 
பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி துவக்கம் முதலே விக்கெட்களை இழந்து திணறியது. டெல்லி அணி சார்பில் கே.கே. நாயர் 21 ரன்களை குவித்தார், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 66 ரன்களை மட்டும் சேர்த்தது. 
 
146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களையும், மலிங்கா மற்றும் கே.வி. ஷர்மா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

மூலக்கதை