பூனே அணி 4 விக்கட்டுகளால் வெற்றி

PARIS TAMIL  PARIS TAMIL
பூனே அணி 4 விக்கட்டுகளால் வெற்றி

 ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட பூனே அணி  4 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

 
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பூனே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை குவித்தது.
 
கொல்கத்தா அணி சார்பில் மனிஷ் பாண்டே 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் ஜெயதேவ் உனட்கட் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பூனே அணி 19.2 பந்து ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
 
பூனே அணியின் சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டிருப்பதி 52 பந்துகளில் 93 ஓட்டங்களை குவித்ததுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
 
இந்த வெற்றியின் மூலம் பூனே அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும், கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் தக்கவைத்துள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

மூலக்கதை