இந்திய இளைஞருக்கு இஸ்ரேலில் கவுரவம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய இளைஞருக்கு இஸ்ரேலில் கவுரவம்

டெல் அவிவ்: இஸ்ரேலில் நேற்று அந்நாட்டில் 69வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது வாலிபர் டினா சிமாடா அங்குள்ள ஜெருசலேம் பார்வையற்றோர் பள்ளியில் படித்து வருகிறார்.

நேற்று குடியரசு தின விழாவில் டினா சிமாடா கலந்து கொண்டு விழா ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும் பிரபல பாடகர்களுடன் இணைந்து பாடல்கள் பாடியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.



இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்த தனது ஆசிரியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

விழாவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை