கூகுள் சுந்தர் பிச்சையின் ஒரு வருட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கூகுள் சுந்தர் பிச்சையின் ஒரு வருட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஹூஸ்டன்: கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சையின் 2016 ஆம் ஆண்டிற்கான சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் நாட்டின் மதுரை மாவட்டதில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. அம்மா - லட்சுமி, அப்பா - ரகுநாத பிச்சை, சென்னை ஜவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு, வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம், 2004-ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை இப்பொது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ. இது எல்லோருக்குமே தெரிந்த தகவல் தான்.

இந்நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6½ லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்) என தெரியவந்துள்ளது.

ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி). 2015-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட தொகையை விட இது இரு மடங்கு ஆகும். மேலும் நாள் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் ரூ.3.52 கோடி ஊதியமாக அவர் பெற்றுள்ளார்.

கூகிளில் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர் சுந்தர் பிச்சை, அந்த நிறுவனத்தின் வருமானத்தை பெருக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. விளம்பர வருவாயும் அதிகளவு குவிந்துள்ளது.

கடந்த ஆண்டு சுந்தர் பிச்சை தலைமையின்கீழ் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன் உள்ளிட்டவை லாபத்தை வாரி வழங்கி உள்ளன. பிற வருமானங்களும் அதிகரித்துள்ளனவாம்.

மூலக்கதை