'மிகப்பெரிய போருக்கு தயார்'

தினமலர்  தினமலர்
மிகப்பெரிய போருக்கு தயார்

வாஷிங்டன்:''அமெரிக்காவில், என் தலைமையிலான அரசு பதவியேற்று, 100 நாளில் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது; எனினும், மிகப் பெரிய போர்கள் இனிமேல் தான் உள்ளன,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்று நேற்று முன்தினத்துடன், 100 நாட்கள் நிறைவடைந்தன. இதையொட்டி, அவருக்கு பெரும் வெற்றி தேடி தந்த பென்சில்வேனியாவில், பிரம்மாண்ட பேரணி நடந்தது; இதில், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

அவர்களிடையே டிரம்ப் பேசியதாவது:கடந்த, 100 நாட்களில், அனைவரும், எதிர்பார்க்கும் பணிகள், வேகமாக நடந்துள்ளன; சுப்ரீம் கோர்ட் நியமனங்களுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கின்றன; பங்கு சந்தைகள் உயர்ந்து வருகின்றன.

கச்சா எண்ணெய் உட்பட எரிசக்தி எடுப்பதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப் பட்டுள்ளன.
தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றி வருகிறேன்; இது, பெரும் சாதனை. மிகப்பெரிய போர்களுக்கு நான் தயாராக உள்ளேன்; அனைத்தையும், வெற்றிகரமாக சாதிப்பேன்.நீங்கள் எனக்கு, உறுதுணையாக இருக்க வேண்டும்; இதுபோன்ற பேரணிகள் இனிமேல், ஏராளமாக நடக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.அப்போது, 'சொன்னதை செய்த டிரம்ப்' என, தொண்டர்கள் பலத்த கோஷமிட்டனர்.

மூலக்கதை