வடகொரியாவுக்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்

போர் பதற்றமான சூழ்நிலையை வடகொரியா கைவிட வேண்டும் என்று ஐ.நா.வில் நடந்த பாதுகாப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வடகொரியாவின்  அணுஆயுத சோதனைக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. வடகொரியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் கொரிய தீபகற்பத்தில்  போர் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் நடந்த கூட்டத்தில் தேவையில்லாத நடவடிக்கைகளை தவிர்த்து  அமைதி திரும்ப பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐ.நா.வின் செயலாளர் அந்தோனியோ குத்ரோஸ் தெரிவித்துள்ளார். அணு ஆயுத சோதனைகளை நிறுத்த சீனாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்தார்.  வடகொரிய விவகாரத்தில் சீனா கடும் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மூலக்கதை