முதல்வர் கோரிக்கை 3 நிமிடத்தில் சுரேஷ் பிரபு ஒப்புதல்

தினகரன்  தினகரன்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பிரபல சுற்றுலாத்தலங்களான புரி, கோனார்க் ஆகியற்றை இணைக்கும் வகையிலான புதிய ரயில் தடம் அமைக்க  வேண்டும் என முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ டுவிட்டர்  பக்கத்திலும் இது வெளியிடப்பட்டு, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டுவிட்டருக்கு ஷேர் செய்யப்பட்டது.இதை பார்த்த மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு 3 நிமிடத்தில்  ஒப்புதல் அளித்தார். மேலும் அதில் எப்போது வேண்டுமானாலும் இந்த  திட்டத்தில் கையெழுத்திட தயார் என்றும் குறிப்பிட்டிருந்தார், மாநில அரசின் பங்கு நிதியாக 50 சதவீதம் செலவிடப்படும் என நவீன் பட்நாயக் அதில்  குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் மூலம் உடனடியாக திட்டத்திற்கு சுரேஷ் பிரபு ஒப்புதல் அளித்துள்ள சம்பவம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

மூலக்கதை