மத்திய பிரதேசத்தில் ஏடிஎம் இயந்திரம் வழங்கிய புதிய 500 ரூபாய் நோட்டில் காந்தியை காணோம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய பிரதேசத்தில் ஏடிஎம் இயந்திரம் வழங்கிய புதிய 500 ரூபாய் நோட்டில் காந்தியை காணோம்

போபால்: மத்திய பிரதேசத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் காந்தி படம் அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் கரன்சிகள் வந்து விழுந்ததை கண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் விதமாக கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் கரன்சிகள் செல்லாது என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது.

இதையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் கரன்சிகள் வெளியிடப்பட்டன. இதை மாற்றிக் கொள்ள கடந்த ஆண்டு டிசம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

புதிய கரன்சிகள் மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை என்றும் சொல்லப்பட்டது.   இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக டெல்லி மற்றும் காஷ்மீரில் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஒரு சில ஏடிஎம்களில் முழுமையாக அச்சடிக்கப்படாத 2000 கரன்சிகள் வந்ததை கண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் மொரேனா என்ற இடத்தில் ஏடிஎம்மில் இருந்து கோவர்த்தன் சர்மா என்பவர் நேற்று முன்தினம் இரவு பணம் எடுத்துள்ளார்.

அப்போது ஏடிஎம் இயந்திரம் வெளி தள்ளிய சில 500 ரூபாய் கரன்சிகளில் காந்தி படம் அச்சடிக்கப்படாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிப்பதாக அலட்சியமாக பதில் அளித்து விட்டு சென்றனர். இதனால் முறையாக அச்சடிக்கப்படாத பணத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் கோவர்த்தன் திணறி வருகிறார்.

இதே போல் கடந்த 23ம் தேதி புருஷோத்தம் என்ற விவசாயி சிவபுரி என்ற இடத்தில் எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். இவர் எடுத்த சில 2000 ரூபாய் கரன்சியிலும் காந்தி படம் அச்சடிக்கப்படாததை கண்டு  கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஏடிஎம் இயந்திரங்களில் அடுத்தடுத்து தவறாக அச்சடிக்கப்பட்ட கரன்சிகள் வருவது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை