தமிழில் வெளிவருகிறது கார்டியன் ஆஃப் கேலக்ஸி

தினமலர்  தினமலர்
தமிழில் வெளிவருகிறது கார்டியன் ஆஃப் கேலக்ஸி

2014ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான கார்டியன் ஆஃப் கேல்க்ஸி பெரும் வரவேற்பை பெற்றது. கேலக்ஸியை பாதுகாக்கும் 5 வீரர்களை பற்றிய கதை. மற்ற சூப்பர் ஹீரோ படங்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இதில் சூப்பர் பவர் உள்ள 5 பேரும் வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டவர்கள். நல்லவர்கள் அல்ல. ஒருவன் சக்தி வாய்ந்த ஒருவனின் மகன், ஒருத்தி வில்லனின் மகள், ஒருவன் ஜெயில் தண்டனை கைதி, ஒருவன் ரக்கூன் என்ற மிருக ஆராய்ச்சி செய்து அந்த மிருகமாக மாறியவன். இன்னொருவன் மரத்தை ஆய்வு செய்து மரமாக மாறியவன். இப்படி வெவ்வேறு குணாதிசங்களை கொண்டவர்கள் கேலக்ஸியை காப்பாற்றுகிறார்கள் என்கிற கதை.
இதன் முதல் பாகத்தில் கேலக்ஸியை தாக்கும் மர்ம கல்லில் இருந்து கேலக்ஸியை காப்பாற்றுவார்கள். அந்த கல்லின் மூலம் கிடைக்கும் சக்தியை பகிர்ந்து கொள்வார்கள். இந்த முறை கேலக்ஸியை தாக்க வருவது சக்தி வாய்ந்த ஒரு பேட்டரி கிரகம். அதிலிருந்து கேலக்ஸியை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது இரண்டாம் பாகத்தின் கதை.
ஜேம்ஸ் குன் இயக்கிய படத்திற்கு டெய்லர் பேட்டஸ் இசை அமைத்துள்ளார். ஹென்னி பிரகாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாரிஸ் பிராட், சூ சல்டனா, தேவே பதுஸ்டா, வின் டீசல் உள்பட பலர் நடித்துள்ளனர். மார்வெல் ஸ்டூடியோ தயாரித்துள்ள படத்தை வால்ட் டிஸ்னி ஸ்டூடியோ வெளியிடுகிறது. வருகிற மே 5ந் தேதி வெளிவருகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழில் பிரபஞ்ச யுத்தம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

மூலக்கதை