கோடை வெயிலுக்கு பயந்து அமெரிக்காவுக்கு பறந்த த்ரிஷா

தினமலர்  தினமலர்
கோடை வெயிலுக்கு பயந்து அமெரிக்காவுக்கு பறந்த த்ரிஷா

கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, மோகினி படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டார் த்ரிஷா. அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடிக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஜாலியாக பொழுதை போக்க அமெரிக்காவுக்கு பறந்து விட்டார்.
பொதுவாகவே சென்னை வெயில் த்ரிஷாவுக்க ஒத்துவராது. எவ்வளவு பெரிய படத்தின் படப்பிடிப்பு இருந்தாலும் வெயில் காலத்தில் தோழிகளுடன் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து பயந்து விடுவார். இந்த முறை தோழிகளை தவிர்த்து அம்மா உமா கிருஷ்ணனுடன் அமெரிக்காவுக்கு சென்று விட்டார் த்ரிஷா. அங்கு நியூயார்க்கில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலில் தங்கியருக்கும் தாயும் மகளும், தினமும் ஊர்சுற்ற கிளம்பி விடுகிறார்கள். ஒரு மாதம் வரை நியூயார்க்கில் தங்கி இருந்து விட்டு மே மாத இறுதியில்தான் இந்தியா திரும்புகிறார்கள். அதன் பிறகு 96 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

மூலக்கதை