அன்பானவர்-அசராதவர் ; மம்முட்டியின் ஸ்பிலிட் பர்சனாலிட்டி..!

தினமலர்  தினமலர்
அன்பானவர்அசராதவர் ; மம்முட்டியின் ஸ்பிலிட் பர்சனாலிட்டி..!

தற்போது மம்முட்டி நடித்து வரும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஒரே சமயத்தில் மாறி மாறி நடைபெற்று வருகிறது... இன்னும் பெயரிடப்படாத இந்த இரண்டு படங்களில் ஒன்றை 'தி செவன்த் டே' இயக்குனர் ஷியாம்தரும், இன்னொன்றை 'ராஜாதி ராஜா' இயக்குனர் அஜய் வாசுதேவும் இயக்கி வருகிறார்கள்.. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களிலுமே கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் மம்முட்டி..

எதனால் இப்படி, அடுத்தடுத்த படங்களில் ஒரே கேரக்டரில் தொடர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார் மம்முட்டி என கேள்வி எழலாம்.. காரணம் இருக்கிறது. இதுவரை பள்ளி ஆசிரியராக, கல்லூரி பேராசியராக நடித்துள்ள மம்முட்டி ஷியாம்தர் இயக்கும் படத்தில் முதன்முறையாக ஆசிரியர்களுக்கெல்லாம் பாடம் சொல்லித்தரும் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார்.. இந்தப்படத்தில், தான் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களையும் மம்முட்டி குழந்தைபோலவே நடத்துவாராம்.. அவர்களுக்கு கதைகள் சொல்வாராம்.

அஜய் வாசுதேவ் இயக்கும் படத்தின் கதாசிரியர் உதயகிருஷ்ணா 'புலி முருகன்' ஹிட் படத்தின் கதாசிரியர்.. அதனால் அந்த படத்தில் மம்முட்டியின் பேராசிரியர் வேடத்தை மாஸாக உருவாக்கியுள்ளாராம்.. யாருக்கும் அடங்காத, அடிபணியாத கல்லூரி பேராசிரியர் வேடம் மம்முட்டிக்கு.. இவரை கண்டாலே மாணவர்கள் மிரளுவார்களாம். கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட, இதன் காரணமாக அவ்வப்போது கல்லூரி வளாகத்திற்குள் போலீஸ் வருவது வாடிக்கையாகிறது.. மம்முட்டி அந்த கல்லூரிக்கு பேராசிரியராக வந்தபின் மாணவர்கள், போலீஸ் இருவரையும் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதையாம்.

ஆக ஒரே கேரக்டரில் ஒரே நேரத்தில் ஒன்றில் அன்பானவராகவும் இன்னொன்றில் அசராதவராகவும் நடிப்பில் ஸ்பிலிட் பர்சனாலிட்டியை காட்டவுள்ளார் மம்முட்டி.

மூலக்கதை