நிதி ஆயோக் பரிந்துரையால் இனி அரசு வேலை வாய்ப்பு கானல் நீராக மாறும் அபாயம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: அரசு வேலைகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையால் அரசு வேலை என்பது கானல் நீராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திட்டக்குழுவிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதி ஆயாக் அமைப்பு 15 ஆண்டுக்கான செயல்திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. அரசு சேவைகள் அனைத்தையும் தனியாரிடம் விற்றுவிட வேண்டும் என்பது முக்கிய பரிந்துரையாகும். இதனால் வளர்ச்சி பணிகளில் அரசு இயந்திரத்தை நம்பியிருக்கும் நிலை மாறும் என இதற்கு நிதி ஆயோக் விளக்கமளித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு போட்டியாக திறன் வாய்ந்த நபர்களை ஆட்சி பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்பது மற்றொரு பரிந்துரை. செயல் திறனற்ற அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் நிதி ஆயோக் கூறுகிறது. அரசு கொள்ளை உருவாக்கத்தில் தனியார் நிபுணர்களுக்கு பங்களிக்கலாம் என கூறியுள்ள நிதி ஆயோக், அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 5 ஆண்டுகல் பணி வழங்கவும் பரிந்துரைத்துள்ளது. இதனிடையே நிதி ஆயாக் அளித்துள்ள திட்டங்கள் வெறும் வாக்குறுதிகளாகவே மட்டுமே உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறிவரும் மக்கள் கையில் நாட்டில் வளர்ச்சி என்ற கொள்கைக்கு சாவு மணி அடிப்பது போல் உள்ளது எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

மூலக்கதை