ட்ரம்பின் 100 நாள்! வரலாற்று சாதனை படைத்ததாக பெறுமை

PARIS TAMIL  PARIS TAMIL
ட்ரம்பின் 100 நாள்! வரலாற்று சாதனை படைத்ததாக பெறுமை

 அதிபராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளதையொட்டி தான் அதிபராக இருந்த நாட்கள் வெற்றிகரமான அமெரிக்க வரலாற்று சாதனை என பெருமை பொங்க டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 
அதிபராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவு: வெற்றிகரமான வரலாற்று சாதனை என ட்ரம்ப் பெருமிதம்
வாஷிங்டன்: 
 
அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவியேற்றார். நேற்றுடன் அவர் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்தது. இதையொட்டி, வானொலி மற்றும் இணையதளம் மூலமாக ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 
 
அப்போது பேசிய அவர் ,”எனது அரசு பொறுப்பேற்ற இந்த 100 நாட்கள் அமெரிக்க வரலாற்றின் வெற்றிகரமான நாட்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். முக்கியமாக நம்மிடமிருந்து பறிபோன வேலைவாய்ப்புகளை திரும்ப பெற்றிருக்கிறோம். நாட்டின் எந்த மாகாணங்களிலும் கேட்டுப்பாருங்கள், தொழிற்சாலைகள் எல்லாம் வெளியேறும் நிலையில் இருந்தன. ஆனால், நாம் அவர்களை தக்கவைத்துள்ளோம்” எனக் கூறினார். 
 
மேலும், “இது ஒரு ஆரம்பம் தான். இன்னும் நடுத்தர குடும்பத்தினர் மற்றும் பொருளாதார வர்கத்தினருக்கு வரி குறைப்பு ஆகிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.” எனவும் தெரிவித்தார். 100 நாட்கள் நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டு பென்ஸைல்வனியா மாகாணத்தில் மிகப் பெரிய மக்கள் கூட்டத்தில் ட்ரம்ப் பங்கேற்று பேச இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 

மூலக்கதை