'பாகுபலி 2'வை எவனாவது அப்படி இப்படின்னு சொன்னா, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன்: சமுத்திரக்கனி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாகுபலி 2வை எவனாவது அப்படி இப்படின்னு சொன்னா, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன்: சமுத்திரக்கனி

சென்னை: இந்த படைப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எவனாவது அப்படி இப்படின்னு கருத்து சொன்னா, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன். பாகுபலி உலக சினிமா என சமுத்திரக்கனி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸானது.

படம் ரிலீஸான அன்றே இந்தியாவில் ரூ. 121 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

பாகுபலி 2 படத்தை பார்த்த இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி அதை புகழ்ந்து ட்வீட்டியுள்ளார். பாகுபலி 2...., 100 முறை பார்க்கலாம்..பார்க்கணும்... உன்னதமான உழைப்பு என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.

இந்த படைப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எவனாவது அப்படி இப்படின்னு கருத்து சொன்னா, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன். பாகுபலி உலக சினிமா என சமுத்திரக்கனி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜமெளலி, நீதானய்யா கலைஞன். 5 வருட தியானம். இந்த படத்துக்கு யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். என் தமிழ் சொந்தங்களே, அனுபவிங்க என சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

பாகுபலி படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் எல்லாம் மிரண்டு போயுள்ளனர். இனிமேல் இப்படி ஒரு படத்தை வேறு யாராலும் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே என்கின்றனர்.

மூலக்கதை