புதிய ‘இந்தியாவுக்கான தீர்வு’ திட்டத்தில் தொழில் முனைவோருக்கு உதவும் கூகுள்

தினமலர்  தினமலர்
புதிய ‘இந்தியாவுக்கான தீர்வு’ திட்டத்தில் தொழில் முனைவோருக்கு உதவும் கூகுள்

புது­டில்லி:கூகுள் நிறு­வ­னம், ‘இந்­தி­யா­வுக்­கான தீர்வு’ என்ற புதிய திட்­டத்தை துவக்­கி­யுள்­ளது. இத்­திட்­டத்­தின் கீழ், சென்னை, மதுரை, நாக்­பூர் போன்ற பெரிய மற்­றும் சிறிய நக­ரங்­களில் உள்ள தொழில் முனை­வோ­ருக்கு, அவர்­கள் துறை சார்ந்த சாப்ட்­வேர் தீர்­வு­களை உரு­வாக்க, தேவை­யான உத­வி­களும், ஆலோ­ச­னை­களும் வழங்­கப்­பட உள்­ளன.
குறிப்­பாக, வேளாண் தொழில்­நுட்­பம், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு, சுகா­தா­ரம் உள்­ளிட்ட துறை­களில், மொபைல் ­போன் சாப்ட்­வேர் செயல்­பா­டு­களின் அடிப்­ப­டை­யில், தீர்­வு­கள் உரு­வாக்­கப்­படும்.இதற்­காக, ஓராண்டில், 10 ஆயி­ரத்­திற்­கும் அதி­க­மான, சாப்ட்­வேர் டெவ­லப்­பர்­கள் மற்­றும் தொழில் முனை­வோர்­க­ளுக்கு உதவ, கூகுள் முடிவு செய்­துள்­ளது.
‘‘இந்த திட்­டத்­தின் மூலம், கோடிக்­க­ணக்­கான மக்­கள் பயன் பெறும் வகை­யில், இந்­தி­யா­வுக்­கான சிறந்த தீர்­வு­களை, ஒரே குடை­யின் கீழ் உரு­வாக்கி, ஒருங்­கி­ணைக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளோம்,’’ என, கூகுள் இந்­தியா நிறு­வ­னத்­தின் திட்ட மேலா­ளர், கார்­திக் பத்­ம­னா­பன் தெரி­வித்­துள்­ளார்.

மூலக்கதை