‘மம்ஸ் அண்டு பேபிஸ்’ மையங்கள்:விரிவாக்கத்தில் ஹிமாலயா பேபி கேர்

தினமலர்  தினமலர்
‘மம்ஸ் அண்டு பேபிஸ்’ மையங்கள்:விரிவாக்கத்தில் ஹிமாலயா பேபி கேர்

மும்பை:ஹிமா­லயா பேபி கேர் நிறு­வ­னம், தாய்­மார்­கள் மற்­றும் குழந்­தைக­ளுக்கு தேவை­யான அனைத்து பொருட்­க­ளை­யும் விற்­பனை செய்­வ­தற்­கான, பிரத்­யேக மையங்­களை, நாடு முழு­வ­தும் அமைக்க உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் பொது மேலா­ளர், என்.வி.சக்­க­ர­வர்த்தி கூறி­ய­தா­வது:நிறு­வ­னம், ‘மம்ஸ் அண்டு பேபிஸ்’ எனும் பிராண்­டின் கீழ், தாய்­மார்­கள் மற்­றும் குழந்­தை­க­ளுக்கு தேவை­யான, அத்­தி­யா­வ­சிய பொருட்­களை விற்­பனை செய்­யும் மையத்தை, பெங்­க­ளூ­ரில் திறந்­துள்­ளது. இது போல, நடப்பு நிதி­யாண்­டிற்­குள், நாடு முழு­வ­தும், 25 பிரத்­யேக சில்­லரை விற்­பனை மையங்­களை திறக்க திட்­ட­மிட்டு உள்­ளோம். இதன் மூலம், கர்ப்­பிணி பெண்­கள், குழந்­தை­கள் ஆகி­யோ­ருக்கு தேவை­யான அனைத்து பொருட்­க­ளை­யும், ஒரே இடத்­தில் மிக எளி­தாக வாங்­க­லாம்.
இந்­தி­யா­வில், குழந்தை பரா­ம­ரிப்பு பொருட்­கள் துறை­யில், நிறு­வ­னம் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது. தற்­போது, பிரத்­யேக சில்­லரை விற்­பனை மையங்­களை விரி­வு­ப­டுத்­து­வ­தன் மூலம், இத்­து­றை­யில் மேலும் வலு­வாக காலுான்­ற முடியும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை