புதிய பங்கு வெளியீடு ஹட்கோ வருகிறது

தினமலர்  தினமலர்
புதிய பங்கு வெளியீடு ஹட்கோ வருகிறது

மும்பை:பொதுத்­ து­றையைச் சேர்ந்த, ‘ஹட்கோ’ எனப்­படும், ‘ஹவு­சிங் அண்டு அர்­பன் டெவ­லப்­மென்ட் கார்ப்­ப­ரே­ஷன்’ வீட்டுவசதி திட்­டங்­க­ளுக்கு, கடன் வழங்கி வரு­கிறது.
இந்­நி­று­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டின் மூலம், 1,200 கோடி ரூபாய், நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது. இதன் பங்கு வெளி­யீடு, வரும் மே மாதம், 8ல் துவங்கி, 11ல் முடி­வ­டை­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஒரு பங்­கின் வெளி­யீட்டு விலை, 50 முதல் 60 ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.
இது­ கு­றித்து, ஹட்கோ தலை­வர் ரவி­காந்த் கூறு­கை­யில்,‘கடந்த, 2012ல் இருந்து, எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­யில், தற்­போது தான், புதிய பங்கு வெளி­யீடு மூலம் நிதி திரட்­டப்­பட உள்­ளது. இதன் மூலம், எங்­கள் நிறு­வ­னத்­தில், மத்­திய அரசு கொண்­டுள்ள பங்கு குறை­யும்,’ என்­றார்.
மத்­திய அரசு, நடப்பு நிதி­யாண்­டில், பொதுத்­ துறை நிறு­வ­னங்­களில், தன் வசம் உள்ள பங்­கு­களை வெளி­யிட்டு, 72 ஆயி­ரத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. ஏற்­க­னவே, கடந்த நிதி­யாண்­டில், 45 ஆயி­ரத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்­டி­ருந்­தும், அர­சால், அந்த இலக்கை எட்­ட­மு­டி­யா­மல் போய்­விட்­டது.

மூலக்கதை