டி.வி.எஸ்., மோட்­டார்ஸ் நிறுவனம்நிகர லாபம் ரூ.127 கோடி

தினமலர்  தினமலர்
டி.வி.எஸ்., மோட்­டார்ஸ் நிறுவனம்நிகர லாபம் ரூ.127 கோடி

புதுடில்லி:டி.வி.எஸ்., மோட்­டார்ஸ் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 126.77 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 136.03 கோடி ரூபா­யாக உயர்ந்து இருந்­தது. இதே கால ஒப்­பீட்­டில், இந்­நி­று­வ­னத்­தின் மொத்த வரு­வாய், 1.56 சத­வீ­தம் உயர்ந்து, 3,090.77 கோடி ரூபா­யில் இருந்து, 3,139.22 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
கடந்த முழு நிதி­யாண்­டைப் பொறுத்­த­வரை, இந்­நி­று­வ­னத்­தின் நிகர லாபம், 558.10 கோடி ரூபாய்; மொத்த வரு­வாய், 13,363.43 கோடி ரூபாய் என்­ற­ள­வில் உள்­ளது.கடந்த காலாண்­டில், டி.வி.எஸ்., 2.15 லட்­சம் மோட்­டார் சைக்­கிள்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 2.47 லட்­ச­மாக இருந்­தது. அதே­ச­ம­யம், ஸ்கூட்­டர் வாகன விற்­பனை, 1.98 லட்­சத்­தில் இருந்து, 2.23 லட்­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது.கடந்த முழு நிதி­யாண்­டில், விற்­ப­னையை பொறுத்­த­வரை மோட்­டார் சைக்­கிள், 10.77 லட்­சம்; ஸ்கூட்­டர், 8.70 லட்­சம்; மூன்று சக்­கர வாக­னம், 69 ஆயி­ரம் என விற்­பனை ஆகி­யுள்­ளன.

மூலக்கதை