என்.எஸ்.இ., பங்கு வெளியீடுதள்ளிப்போக காரணம் என்ன?

தினமலர்  தினமலர்
என்.எஸ்.இ., பங்கு வெளியீடுதள்ளிப்போக காரணம் என்ன?

புதுடில்லி:என்.எஸ்.இ., என சுருக்­க­மாக அழைக்­கப்­படும் தேசிய பங்­குச் சந்தை, புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, 2016 டிசம்­ப­ரில், ‘செபி’யிடம் அனு­மதி கோரி விண்­ணப்­பித்­தது.நான்கு மாதங்­கள் ஆகி­யும், பங்கு வெளி­யீட்­டிற்கு செபி அனு­மதி வழங்­கா­மல் உள்­ளது.
இதற்கு, என்.எஸ்.இ., பார­பட்­ச­மாக, ஒரு சில பங்­குத் தர­கர்­களின், ‘சர்­வர்’களை, தன் வளா­கத்­தில் நிறுவ, அனு­ம­தித்­ததே கார­ணம். இது குறித்து, ‘செபி’ தலை­வர் அஜய் தியாகி கூறு­கை­யில், ‘‘சர்­வர் விவ­கா­ரத்­திற்கு தீர்வு கண்ட பினேன், பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி அளிக்­கப்­படும். அதற்கு சில மாதங்­கள் ஆகும்,’’ என்றார்.
என்.எஸ்.இ., வளா­கத்­தில் உள்ள பங்­குத் தர­கர்­களின் சர்­வர்­கள், தொலை துாரத்­தில் உள்ள, பங்­குத் தர­கர்­களின் சர்­வர்­களை விட, விரைந்து செயல்­பட வாய்ப்பு உள்­ளது. அத­னால், இத்­த­கைய பார­பட்ச போக்­கிற்கு, என்.எஸ்.இ., தீர்வு கண்ட பின்னே, அதன் பங்கு வெளி­யீட்­டிற்கு செபி, அனு­மதி வழங்­கும் என, தெரி­கிறது.

மூலக்கதை