தரம் குறைந்த பொருட்கள் இறக்குமதியை தடுக்க என்ன வழி?

தினமலர்  தினமலர்
தரம் குறைந்த பொருட்கள் இறக்குமதியை தடுக்க என்ன வழி?

புது­டில்லி:குறைந்த தரத்­தில், பாது­காப்­பற்ற பொருட்­களின் இறக்­கு­ம­தியை தடுக்க வேண்­டு­மென்­றால், உள்­நாட்டு நிறு­வ­னங்­கள், தர­மான பொருட்­களை தயா­ரிப்­ப­தற்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும் என, மத்­திய வர்த்­தக அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:டில்­லி­யில், மே 1, 2ம் தேதி­களில், நான்­கா­வது தேசிய தரங்­கள் மாநாடு நடை­பெற உள்­ளது.
வர்த்தக சூழல்
இதில், நாடு முழு­வ­தும் பல்­வேறு துறை­களில், ஒரே சீரான, மேம்­பட்ட தரக் கொள்­கையை உரு­வாக்­கு­வது குறித்து விவா­திக்­கப்­படும். பொருட்­களை தர­மாக தயா­ரிப்­ப­தற்­கான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும், அதற்­கேற்ப தொழிற்­சா­லை­களை தயார்­ப­டுத்­து­வது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­படும்.
சர்­வ­தேச வர்த்­தக சூழல் மாறி வரு­கிறது; தரத்­திற்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­டு­கிறது. அதற்­கேற்ப, இந்­திய நிறு­வ­னங்­களும் தர­மான பொருட்­களை தயா­ரிக்க வேண்­டும்.பொருட்­களின் தரம், அவற்­றுக்­கான அள­வு­கோல் ஆகி­ய­வற்றை வகைப்­ப­டுத்தி, அவற்றை கண்­கா­ணிப்­ப­தற்­கான அமைப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வது குறித்து, மத்­திய, மாநில அரசு துறைகள், தொழில் கூட்­ட­மைப்­பு­கள் ஆகி­ய­வற்­று­டன் கலந்­தா­லோ­சிக்­கப்­படும்.
பெருமை சேர்க்கும்
நாடு தழு­விய அள­வில், சீரான தர நடை­மு­றை­களை பின்­பற்றி பொருட்­கள் தயா­ரிக்­கப்­பட வேண்­டும். இது, நம் நாட்­டிற்கு பெருமை சேர்க்­கும் என்­ப­து­டன், குறைந்த தரத்­தில், பாது­காப்­பற்ற பொருட்­கள் இறக்­கு­ம­தி­யா­வதை தடுக்க உத­வும்.
பல­முனை வரி­களை அகற்றி, ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரி விதிப்பு முறை, அம­லுக்கு வர உள்ள நிலை­யில், பொருட்­களின் தரத்­திற்கு அதிக முக்­கி­யத்­து­வம் அளிக்க வேண்­டிய சூழல் உரு­வாகி உள்­ளது. இதை செயல்­பாட்­டிற்கு கொண்டு வர, மாநாடு துணை புரி­யும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை