அமெரிக்காவை மிரட்டிய வடகொரிய வீடியோ

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அண்மை காலமாக அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வருகிறது. அமெரிக்காவை மிரட்டும் விதமாக வடகொரிய தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த வடகொரியா அமெரிக்காவுடன் போருக்கு தயார் என சவால் விடுத்தது. வடகொரியாவுக்கு ஆதரவாக சீனாவும் களத்தில் இறங்க முடிவு செய்தது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையில் டிரம்ப் அதிபராக பதவியேற்று 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த சூழலில் வடகொரியா வெளியிட்டுள்ளதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் அமெரிக்க போர் நீர்மூழ்கி கப்பல்களை வடகொரியா தாக்கி துவம்சம் செய்வது போலவும், வெள்ளை மாளிகையை தூள் தூள் ஆக்குவது போலவும் கிராபிக்சில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த வீடியோவால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது.

மூலக்கதை