ஐபிஎல் டி20 போட்டி: புனே அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தினகரன்  தினகரன்

புனே: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் புனே அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிபட்சமாக ஸ்மித் 45, திவாரி 44 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 96  ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கோலி 55 ரன்கள் எடுத்தார்.

மூலக்கதை