காதற்பூட்டுக்கள் ஏலத்தில்!!

PARIS TAMIL  PARIS TAMIL
காதற்பூட்டுக்கள் ஏலத்தில்!!

பரிசின் pont des arts காதற் பாலத்தில் பூட்டப்பட்டிருந்த தொன் கணக்கான, காதலர்கள் பெயர் தாங்கிய பூட்டுக்களினால், பாலத்தின் பாதுகாப்புக் கம்பிகள் உடைந்தமையால், அவை நீக்கப்பட்டமை வாசகர்கள் அறிந்த விடயம். இரண்டு பாலங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 65 தொன் பூட்டுக்கள் சிறிது சிறிதாக அகற்றப்பட்டிருந்தன. தற்போது இந்தப் பாலத்தின் ஓரங்கள் கண்ணாடியினால் உருவாக்கப்பட்டுள்ளது.
 
 
பரிசின் மாநகரசபையின் ஆதரவுடன் இந்தப் பூட்டுக்களின் ஒரு பகுதி, ஏலத்தில் விடப்பட உள்ளது. முதற்கட்டமாக 150 இற்கும் மேற்பட்ட பூட்டுக் கொத்துக்கள் எதிர்வரும் மே 13ம் திகதி ஏலத்தில் விடப்பட உள்ளன. இதில் பெற்றபடும் பணம் Solipam, Armée du Salut, Emmaüs Solidarité ஆகிய தொண்டு நிறுவனங்களிடம் அகதிகளைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

மூலக்கதை