2 ஆண்டுக்கு முன் இருந்ததை போல் பிசிசிஐ சக்தி வாய்ந்ததாக இல்லை: கவாஸ்கர் பேட்டி

தினகரன்  தினகரன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், தனியார் டிவிக்கு அளித்த பேட்டி: இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல், தற்போது பிசிசிஐ இல்லை. அப்போது பலம் வாய்ந்த சக்தியாக விளங்கியது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகள் மட்டுமே ஐசிசியில் தங்களுடைய செல்வாக்கை  தக்க வைத்துக்கொண்டுள்ளன. ஐசிசியின் வருவாய் பகிர்வை மாற்றுவதற்கு மிகப்பெரிய ஆதரவு தெரிவித்ததாலே பிசிசிஐக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. 2014ம் ஆண்டு அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கிரிக்கெட் போட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாயை பகிர்ந்து அளிப்பது தொடர்பாக ஐசிசியிடம் வலியுறுத்தினார். தற்போது அந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதாக கருதுகிறேன். சாம்பியன்ஸ் டிராபியை புறக்கணிப்பதாக மிரட்டினால், ஒட்டு மொத்தமாக பிசிசிஐயை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஐசிசி செயல்படலாம். 2014 ஒப்பந்தத்தின்படி ஐசிசி, அனைத்து கிரிக்கெட் வாரியங்களுக்கும் சமமாக வருவாயை பிரித்து கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை