அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!

இதுவரை 23€வாக இருந்த சாதாரண வைத்தியரின் (médecin généraliste) பார்வைக் கட்டணம் (consultation), மே முதலாம் திகதியிலிருந்து 25€வாக அதிகரிக்கின்றது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வைத்தியக் கட்டணம் 30€ ஆக மே1 முதல் உயர உள்ளது.
 
 
அரச மருத்துவக் காப்புறுதியான Assurance-maladie உடன் வைத்தியர்களிற்கான தொழிற்சங்கங்கள் கடந்த வருடம் முழுவதும் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்தக் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது.
 
 
ஐரோப்பிய நாடுகளில்< சராசரியாக வைத்தியக் கட்டணம் 40€ வாக உள்ளதாகவும், அதனை அடைவதற்கான நோக்கத்தின் முதல் வெற்றியே இந்த 25€ கட்டண அதிகரிப்பு எனத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
 

மூலக்கதை