எங்கும் க்யூ... பாக்ஸ் ஆபீஸில் சுனாமியாய் சுழன்றடிக்கும் பாகுபலி..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எங்கும் க்யூ... பாக்ஸ் ஆபீஸில் சுனாமியாய் சுழன்றடிக்கும் பாகுபலி..!!

பாகுபலி 2 படத்தின் வெற்றியும் வசூலும் இந்திய சினிமாவையே புரட்டிப் போடும் அளவுக்கு பிரமாண்டமாக உள்ளது.

இந்தப் படத்துக்கு ரிலீசான நேற்றிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் படையெடுக்கிறார்கள். நேற்று உலகெங்கும் திரையிட்ட அத்தனை இடங்களிலும் படம் ஹவுஸ்ஃபுல் அல்லது கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல்.

தென்னிந்தியாவில் குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழில் பிரதானமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு படத்துக்கு இத்தனை வரவேற்பு கிடைத்திருப்பது இந்திய திரையுலகை பிரமிக்க வைத்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி முதல் பாகம் முதல் நாளில் ரூ 67 கோடிகளைக் குவித்து சரித்திரம் படைத்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் கபாலி முதல் நாளில் 104 கோடிகளைக் குவித்துள்ளது.

நேற்று வெளியான பாகுபலி 2, நூறு கோடிகளுக்கு மேல் குவித்துள்ளது. சரியான வசூல் நிலவரம் நாளை மறு நாள் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை முதல் நாள் வசூலில் புதிய சாதனைகளைப் படைப்பதும், அதைத் தகர்த்தெறிவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்கள்தான் முன்னிலையில் நிற்கின்றன.

பாகுபலி 2ன் வசூல் ரூ 750 கோடிகளைத் தாண்டும் வாய்ப்பு உள்ளதாக பாக்ஸ் ஆபீஸில் கணித்துள்ளனர்.

மூலக்கதை