மூளை இன்றி பிறந்த பெண் சிசுவின் உடல் உறுப்புகள் தானம்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டுகள்

தினகரன்  தினகரன்

ஒக்லஹோமா: அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா பகுதியில் மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பேஸ்புக் இணைய தளத்தில் குழந்தையின் தந்தை கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியை சேர்ந்தவர் ராய்ஸ், இவரது மனைவி கெரியங். இவர் கர்ப்பமாக இருந்தார். கருவில் வளரும் குழந்தைக்கு ஈவா என பெயரிட்டு இருவரும் மகிழ்ந்தனர். இதற்கிடையே, குழந்தை மூளை உருவாகாமல் வளர்வது கடந்த பிப்ரவரி மாதம் தெரியவந்துள்ளது. எனினும் கருவில் இருந்த குழந்தையை அழிக்க கணவன், மனைவி இருவரும் விரும்பவில்லை. தொடர்ந்து வளர்ச்சி அடைந்து முழு குழந்தையாக பிறந்தது. ஆனால் அக்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டன. இது குறித்து பேஸ்புக் இணைய தளத்தில் குழந்தையின் தந்தை கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஹலோ, குட்பை அவர் ஸ்வீட் ஈவா என அவர் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த நூற்றுக் கணக்கானோர் சிசு உடல் உறுப்புகளை தானம் செய்த தம்பதிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை