இ.வேளாண் சந்தையை கொளுத்திய மிளகாய் விவசாயிகள்

தினமலர்  தினமலர்
இ.வேளாண் சந்தையை கொளுத்திய மிளகாய் விவசாயிகள்

ஐதராபாத்: தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் மிகப்பெரிய மிளகாய் உற்பத்தி மற்றும் கொள்முதல் யார்டு உள்ளது. இங்கு மிளகாய் கொள்முதல் செய்யும் விவசாயிகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 12 ஆயிரம் வரை தர வேண்டும் என கடந்த ஆண்டு முதல் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் ரூ.4 ஆயிம் வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 லட்சம் மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர்.

பின்னர் இ. வேளாண் சந்தையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த போது திடீரென வன்முறை வெடித்தது. இதில் அலுவலகத்தை சூறாடி தீவைத்து கொள்ளுத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இ வேளாண் சந்தை அலுவலக்திற்கு புகுந்த ஆர்ப்பாட்டக்கார்கள் மேஜை, குளிர்சாதன இயந்திரத்தை நொறுக்கி தீ வைத்ததால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது.

மூலக்கதை