ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் சிந்து அதிர்ச்சி தோல்வி

தினகரன்  தினகரன்

வுஹான் : ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தொல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.சீனாவில் நடைபெறும் இந்த தொடரின் கால் இறுதியில் சீனாவின் ஹி பிங்ஜியாவோவுடன் நேற்று மோதிய சிந்து 21-15 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். எனினும், அடுத்த 2 செட்களிலும் கடும் நெருக்கடி கொடுத்த பிங்ஜியாவோ 15-21, 21-14, 24-22 என்ற கணக்கில் 1 மணி, 20 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

மூலக்கதை