இறைச்சிக்கடையைக் குறிவைத்த இனவாதிகள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
இறைச்சிக்கடையைக் குறிவைத்த இனவாதிகள்!!

தேசிய முன்னனியின் பிரச்சாரப் பிரிவினர் தமது இனவிரோதங்களைக் காட்டத் தொடங்கி உள்ளனர். Dinan (Côtes-d’Armor)இல் இலிருக்கும், «Les 2 continents»  எனப்படும் ஒரு இஸ்லாமிய இறைச்சி மளிகைக்கடை, இவர்களின் சுவரொட்டி வன்முறைக்கு உள்ளாகி உள்ளது.
 
இவர்களின் கண்ணாடிக்கதவுகளில் மிகவும் மோசமான முறையில் கடைடைய மறைக்கும் அளவிறகுக் குறுக்கும் மறுக்குமாகச் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.
 
 
«மக்களின் பெயரால்» (Au nom du peuple) என்ற வாசகத்துடனான மரின் லூப்பனின் பிரச்சாரச் சுவரொட்டிகளே இப்படி ஒட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே Cochon grillé    எனப்படும் ஒரு பெரிய சுவரொட்டியை கழற்ற முடியாத இறப்பர் ஒட்டும் பசையால் ஒட்டி, இந்தக் கடை மீது வன்முறை பியோகிக்கப்பட்டுள்ளது.
 
இவர்களின் சதிக்குள் தான் சிக்கமாட்டேன் என்றும், இது மிகவும் அருவருக்கத்தக்க விடயம் என்றும் இந்த இறைச்சி மளிகைக்கடையின் உரிமையாளர் மிகவும் கோபத்துடன் தெரிவித்துள்ளார். 
 

மூலக்கதை