ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஷரபோவா

தினகரன்  தினகரன்

ஸ்டட்கர்ட் : ஜெர்மனியில் நடைபெறும் போர்ஷே கிராண்ட் பிரீ ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, ரஷ்யாவின் மரியா ஷரபோவா தகுதி பெற்றார். கால் இறுதியில் எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவெய்ட்டுடன் நேற்று மோதிய ஷர்போவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 23 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் 15 மாதம் தடை விதிக்கப்பட்டு டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஒதுங்கியிருந்த ஷர்போவா, தடைக்காலம் முடிந்து களமிறங்கியுள்ள முதல் தொடரிலேயே அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை