ஜிஎஸ்டியால் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் சர்வதேச நிதியம் கணிப்பு

தினகரன்  தினகரன்

வாஷிங்டன் : சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் தாவோ ஜாங் இந்தியா குறித்து நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவிதிப்பு(ஜிஎஸ்டி) ஜூலை மாதம் முதல் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம். நடுத்தர கால அடிப்படையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை தாண்ட ஜிஎஸ்டி உதவியாக இருக்கும். மேலும், ஜிஎஸ்டியால் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகள் தயாரிப்பு மற்றும் போக்குவரத்து அதிகரிக்கும்.2016 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் சுமார் ரூ.1 லட்சம் கோடி அதிகரித்து ரூ.6.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வராக்கடன் பிரச்னை வங்கி அமைப்பை பாதிக்கும். 2015-16ம் நிதி ஆண்டில் இறுதியில் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பொறுப்பு உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை